×

பண்ணாரி சோதனைச்சாவடியில் வனத்துறை ஊழியர்களை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு

சத்தியமங்கலம்: பண்ணாரி சோதனைச்சாவடியில் வாகன ஓட்டிகள், வனத்துறை ஊழியர்களை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன.இரு மாநில எல்லையான பண்ணாரியில் காவல்துறை, வனத்துறை மற்றும் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடிகள் உள்ளன. இங்கு 24 மணி நேரமும் சம்மந்தப்பட்ட துறை ஊழியர்கள் வாகனங்களை தணிக்கை செய்து வருகின்றனர். நேற்று மாலை 6 மணியளவில் வனப்பகுதியைவிட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை சோதனைச்சாவடி பகுதிக்கு வந்தது. இதைப்பார்த்த சோதனைச்சாவடி ஊழியர்கள் அச்சமடைந்தனர். அப்போது, சோதனைச்சாவடி அருகே நின்றிருந்த வாழைக்காய் பாரம் ஏற்றிய பிக்கப் சரக்கு வேன் அருகே சென்ற காட்டு யானை, வாழைக்காயை பறித்து தின்பதற்காக யானை தனது தும்பிக்கையால் வாகனத்தை முட்டி தள்ளியது. அப்போது அங்கிருந்த வனத்துறை ஊழியர்கள் மற்றும் சோதனைச்சாவடி பணியாளர்கள் சத்தம் போட்டதால் காட்டு யானை திடீரென ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து சோதனைச்சாவடி ஊழியர்களை துரத்தியது. இதனால், நாலாபுறமும் சிதறி ஓடிய சோதனைச்சாவடி ஊழியர்கள் யானையிடமிருந்து உயிர் தப்பினர். இதைத்தொடர்ந்து சிறிது நேரம் சோதனைச்சாவடி பகுதியில் ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்ததால் வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து வனப்பகுதிக்குள் துரத்தினர். …

The post பண்ணாரி சோதனைச்சாவடியில் வனத்துறை ஊழியர்களை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Pannari Cheshhhagar ,Sathyamangalam ,Pannari Checkhbar ,Satyamangalam Tigers Archive ,Pannari Checkbar ,Dinakaran ,
× RELATED பெரும்பள்ளம் அணை பகுதியில் பகல் நேரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை